எஸ் ஜே சூர்யாவுக்கு நோ!! ரம்பா வாய்ப்பை தட்டித்தூக்கி அஜித்துடன் ரொமான்ஸ் செய்த நடிகை சிம்ரன்..
தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிய முதல் படமே ஹிட் கொடுத்து பிரபலமானவர் நடிகை ரம்பா. இப்படத்தினை தொடர்ந்து, சுந்தர் சி இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.
இதனை அடுத்து விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்தார். 2010ல் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் ரம்பா.
13 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலக ஒரு படத்தினை தயாரித்து நஷ்டம் அடைந்தது தான் காரணம் என்றும் கூறப்பட்டது. தற்போது, மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ள ரம்பா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான வாலி படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்ததாம். நடிகை சிம்ரன் ரோலில் நடிக்க எஸ் ஜே சூர்யா தன்னை அணுகியதாகவும் கதையில் தனக்கு சில குழப்பங்கள் இருந்ததால் அதில் நடிக்க மறுவிட்டதாகவும் ரம்பா கூறியிருந்தார்.
அதேபோல் நடிகை ஜோதிகாவிடமும் எஸ் ஜே சூர்யா சிம்ரன் ரோலுக்கு நடிக்க கேட்டிருந்தார். ஆனால் ஜோதிகாவுக்கு பாலிவுட் படத்தின் வாய்ப்பால் அதில் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
ஆனால் எஸ் ஜே சூர்யா சோனா என்ற கதாபாத்திரத்தில் ஆவது நடித்து கொடுக்கும் படி கேட்டதால் நடிகை ஜோதிகா அப்படத்தில் நடித்து கொடுத்திருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.