நடிகை ரம்பாவின் ஈழத்து கணவரா இது? 5 வருடம் கழித்து பிரபல நடிகையுடன் எடுத்த புகைப்படம்

Meena Rambha Indian Actress
By Edward Jul 03, 2022 10:50 AM GMT
Report

சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் சரி மார்க்கெட் இல்லாமல் போனால் வாய்ப்பே கிடைக்காமல் ஓரங்கட்டி விடுவார்கள். அப்படி மற்றொரு காரணத்தினால் மார்க்கெட்டை இழப்பது வயது மற்றும் திருமணம் தான். அப்படி காணாமல் போன நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.

அந்தவகையில், தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமானாலும் தமிழில் 1993ல் வெளீயான உள்ளத்தை அள்ளித்தா படம் பெரிய ஹிட் அடித்து பிரபலமானார் ரம்பா.

தொடை அழகி என்ற பெயரை பெற்று, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பாஞ்பூரி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வந்தார். அவர் நடித்த படங்கள் பெரும்பாலான படங்களில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்த கதாபாத்திரங்களே இருக்கும்.

திருமணம் பின் கனடா

அப்படி பெண் சிங்கம் படத்தில் கடைசியா நடித்து முடித்துவிட்டு கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் இந்திரகுமார் பத்மநாதனை 2010ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு 3 குழந்தைகளுடன் கனடாவின் டொராண்டோவில் வசித்து வருகிறார்.

ரிட்டர் இந்தியா

5 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்தியா வந்திருக்கும் ரம்பா சமீபத்தில் இறந்த மீனாவின் கணவர் வித்யாசாகரின் இறுதி சடங்கில் குடும்பத்துடன் பங்கேற்றார். இதன்பின் மாஸ்டர் கலா மற்றும் பிரித்தா ஹரியுடன் குடும்பத்துடன் சென்று பார்த்து அங்கு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் சமீபத்தில் நம்பா பிறந்தநாளில் எடுக்கப்பட்ட குழந்தைகள் புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.