ஒரேவொரு படம் தான் அதுவும் பிளாப்.. அஜித்தை 23 வருடங்களாக ஒதுக்கி வரும் நடிகை ரம்பா..
90களில் கொடிக்கட்டி பறந்த் நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்பா. உள்ளத்தை அளித்தா என்ற படத்தில் நவரச நாயகன் கார்த்திக்குடன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகினார். இதை தொடர்ந்து செங்கோட்டை, சிவசக்தி, அருணாச்சலம், அடிமை சங்கிளி போன்ற அந்த காலத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார்.
அதன்பின் அஜித்தின் ராசி, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், மின்சாரா கண்ணா போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிப்படங்களில் நடித்து வந்த ரம்பா 2010ல் இந்திரன் பத்மநாதன் என்ற கனடா வாழ் இலங்கை ஈழத்து இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ரம்பா இதுவரை நடிகர் விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால் அஜித்துடன் ஒரே ஒரு படம் தான் நடித்துள்ளார் நடிகை ரம்பா.
ராசி என்ற படத்தில் நடித்துள்ள ரம்பாவுக்கு அது பிளாப் படமாக அமைந்தது. தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பிப்பது கஷ்டம் என்று சமீபத்தில் கூட ரம்பா கூறியிருந்தார்.