பிரபல நடிகருக்கு மகளாகவும் மனைவியாக நடித்த ரம்யா கிருஷ்ணன்.. யாருடன் தெரியுமா?
Nassar
Ramya Krishnan
By Dhiviyarajan
80, 90 களில் இளைஞர்களின் கனவு கனியாக இருந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் ஆரம்பத்தில் பாடல்களுள் கவர்ச்சி நடனமாடி வந்தார். இதன் பின்னர் இவர் 1983-ஆம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
இதையடுத்து ரம்யா கிருஷ்ணன் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய்காந்த் முன்னணி ஹீரோக்களுக்கு இணைந்து நடித்துள்ளார். தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தில் ராஜமாத கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன். இவருக்கு கணவனாக நடிகர் நாசர் நடித்திருப்பார்.
இதையடுத்து சிம்பு நடிப்பில் வெளியான வந்த ராஜாவா தான் வருவேன் என்று படத்தில் நாசருக்கு மகளாக ரம்யா கிருஷ்ணா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.