பிரபல நடிகருடன் திருமண பார்ட்டியில் ஆட்டம்!! வைரலாகும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் வீடியோ..

Ramya Krishnan Indian Actress
By Edward Jun 12, 2023 01:26 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து தற்போது நீலம்பரியாகவும் ராஜமாதா சிவகாமியாகவும் தன் பெயரை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், மறைந்த பிரபல கன்னட நடிகர் அம்பரீஷின் மகன் அபிஷேகின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன் நடந்த அம்பரிஷ் மகன் திருமணத்திற்கு பல தென்னிந்திய பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

திருமணத்தில் நடந்த பார்ட்டியில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

அப்போது கன்னட நடிகரும் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகனுமான யஷ்ஷுடன், ரம்யா கிருஷ்ணன் ஆட்டம் போட்டுள்ளார். பார்ட்டி அனைவரும் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.