கணவரை விவாகரத்து செய்துவிட்டேனா? வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்..
ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய கணவர் கிருஷ்ணன் வம்சியை விவாகரத்து செய்து சென்னையில் தனியாக வசித்து வருகிறார் என்ற செய்தி பரவியதை அடுத்து அதற்கான விளக்கத்தை பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த ரம்யா கிருஷ்ணன், தற்போது குணச்சித்திர ரோலில் பிஸியாக நடித்து வருகிறார். ஜெயிலர் 2வில் முக்கிய ரோலில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன், 2003ல் இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து ரித்விக் வம்சி என்ற மகனை பெற்று வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், ரம்யா கிருஷ்ணன் - கிருஷ்ணன் வம்சி இருவரும் பிரிந்து வெவ்வேறு நகரங்களில் வசிக்கிறார்கள் என்றும் விவாகரத்து செய்துவிட்டதாகவும் செய்திகள் பரவியது. இதுதொடர்பாக ரம்யா கிருஷ்ணன் அளித்த பேட்டியில் பிரிந்து வாழ என்ன காரணம் என்று கூறியிருக்கிறார்.

விவாகரத்து செய்துவிட்டேனா
அதில், நாங்கள் இன்னும் திருமண உறவில்தான் இருக்கிறோம், ஆனால் எங்களின் வசதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் வெவ்வேறு நகரங்களில் வசித்து வருகிறோம். இதற்கு 100 சதவீதம் எங்களின் தொழில் காரணம், மற்றப்படி எதுவும் இல்லை. இதற்குமுன் நான் சென்னையில் டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தேன், அப்போது என் குடும்பம் ஹைதராபாத்தில் இருந்தது.
மாதத்தில் 15 நாட்கள் சென்னை வந்து மீண்டும் ஹைதராபாத் செல்வேன், இரு நகரங்களுக்கிடையே அடிக்கடி பயணம் செய்வது இயலாத காரியம். அதோடு பள்ளி விடுமுறை நாட்கள், தெலுங்கானாவை தனி மாநிலமாக்க வேண்டும் என்ற போராட்டம் நடக்கும் நாட்களில் இப்பயணம் சவாலாக இருந்தது.

நான் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும்போதெல்லாம் என் மகன் ரித்விக் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டன். இதனால் நானும் என் கணவரும் சேர்ந்து முடிவெடுத்தோம். நான் தொழில் காரணமாக சென்னையில் தங்கத்தொடங்கினேன். என் மகனை பள்ளியில் சேர்த்தேன். அதோடு, உறவுமுறைகளில் திருமணம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று நான் கருதுகிறேன். தேவைப்படும்போதுதான் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
உண்மையில் வம்சி எதற்கு திருமணம்? நாம் சேர்ந்து வாழலாமே என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ஒருவேளை அப்போது நான் சம்மதித்து இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. ஏனென்றால் திருமணத்தில் குடும்பங்களும், நம்மை சுற்றி பலரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்.

இதனால் திருமண உறவிற்குப்பின் அவர்களுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். நான் சொல்ல வருவது என்ன என்றால். திருமணம் செய்த நபருடன் என் உறவு மிகச்சிறப்பாகவுள்ளது. அது எப்போதும் அப்படியே தான் இருக்கும். நாங்கள் பிரிந்து இருப்பதால் இருவருக்குமிடையே சண்டையில்லை, நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.