ரம்யா பாண்டியன் கணவர் இதை செய்பவரா.. இது தெரியாம போச்சே
ரம்யா பாண்டியன்
இயக்குனர் துரை பாண்டியனின் மகளான நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பாப்புலர் ஆனவர்.
குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற ஷோக்களில் அவர் பங்கேற்று சின்னத்திரையிலும் பிரபலமாக வலம் வந்தார். தமிழில் சில படங்களில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையிலும் கிளாமர் பக்கம் செல்லாமல் இருந்தார்.
ரம்யா பாண்டியன் அவரது காதலர் லவெல் தவான் என்பவரை கடந்த நவம்பர் 8ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் உலா வந்ததை நம்மால் காண முடிந்தது.
இதை செய்பவரா
இந்நிலையில், ரம்யா கணவர் தவான் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, தவான் அடிப்படையில் ஒரு யோகா மாஸ்டர் அவர் இந்தியாவின் தலைசிறந்த யோகா மாஸ்டர்களில் ஒருவாராக அறியப்படுகின்றார்.
மேலும் சிவராத்திரி காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பயணப்பட்டு சிறப்பு யோகா வகுப்புகள் எடுக்கும் அளவிற்கு பெரிய யோகா மாஸ்டர் என கூறப்படுகிறது. அது மட்டுமின்றி தனியாக ஆர்ட் ஆஃப் லிவிங் என்ற மைய்யத்தினை உருவாக்கி அதை சிறப்பாக வழி நடத்தி வருகின்றார் என கூறப்படுகிறது.