பார் தான் கிடைச்சதா? வாய்ப்பிளக்க வைத்த நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஹாட் போட்டோஷூட்
தமிழ் சினிமாவில் 2015ல் வெளியான டம்பி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்திற்கு பிறகு ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
பெரிய படங்கள் சரியாக அமையாததால் மொட்டை மாடி போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வாய்ப்பிளக்க வைத்தார். பின் 2019ல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 2வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.
பின் கலக்க போவதுயாரு 9 சீசனில் நடுவராக பணியாற்றி பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் வெசப்பாம்பு என்ற பட்டைப்பெயரை சம்பாதித்து 3வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.
பின் சூர்யா தயாரிப்பில் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதன்பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரி கொடுத்து 2வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் க்ளாமர் போட்டோஷூட்டில் எல்லைமீறிய போஸ் கொடுத்து வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பார் ஒன்றில் எடுக்கப்பட போட்டோஷூட்டினை வெளியிட்டுள்ளார்.



