வாய்ப்பிளக்க வைத்த நடிகை ரம்யா பாண்டியனின் சர்ச்சையான வார்த்தை! ஷாக்கான சாண்டி..
பிக்பாஸ் 5 சீசனுக்கு பிறகு பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டார்லில் 24 மணிநேரமும் ஒளிப்பாரப்பாகி வருகிறது பிக்பாஸ் அல்டிமேட். கடந்த 5 சீசனில் பங்கேற்ற போட்டியாளகளை தேர்ந்தெடுத்து முதல் நாளில் 14 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தவனர்.
கமல் வெளியே சிம்பு உள்ளே:-
கடந்த 5 சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். தன் பாணியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் போட்டியாளர்களை எப்படி கண்டித்தால் எப்படி வழிக்கு வருவார்கள் என்பதை கணித்து வழி நடத்தி வந்தார்.
விக்ரம், இந்தியன்2 போன்ற படங்களின் படப்பிடிப்பின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக பிக்பாஸ் ஓடிடி-யில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கியும் வருகிறார்.
எலிமினேட் - வைல்ட் கார்ட்:-
நிகழ்ச்சி சிறப்பாக 50 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. வனிதா சில காரணங்களால் நிகழ்ச்சியில் இருந்து வாக்கவுட் ஆகினார். அவருக்கு பதில் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளே வந்து சில வாரங்களில் அவரும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
பின் ரம்யா பாண்டியன், சதீஷ், தீனா, சேண்டி மாஸ்டர் போன்றவர்கள் கடந்த மூன்று வாரங்களில் வைல்ட் கார்ட்டில் உள்ளே நுழைந்தனர்.
ரம்யா பாண்டியன் பேச்சு:-
பிக்பாஸ் ஓடிடியில் போட்டியாளர்கள் சில விஷயங்களை செய்து சர்ச்சையாக பேசியும் சிக்கலில் சிக்குவதுண்டு. அப்படி அனிதா சம்பத் நிரூப்புடன் பேசி நடந்து கொண்டது மக்கள் மத்தியில் கெட்டபெயரை உருவாக்கியது.
அதனால் தான் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற காரணமாக இருந்தது என கூறி வந்தனர் ரசிகர்கள். அவரைப்போல் தற்போது ரம்யா பாண்டியனுன் சாண்டி மாஸ்டர், தீனாவுடன் பேசும் போது சர்ச்சையாக பேசி வாய்விட்டது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
Uppu.... sappu #RamyaPandian #BiggBossTamil pic.twitter.com/jeheLM249C
— chettyrajubhai (@chettyrajubhai) March 27, 2022