அடுத்த சமந்தா இவங்க தான்? இபபடியொரு போட்டோஷூட்டுக்கு இறங்கிய நடிகை ரம்யா பாண்டியன்..
தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இதையடுத்து வாய்ப்பில்லாமல் மொட்டை மாடி போட்டோஷூட்டில் இடுப்பழகி என்ற பெயர் வாங்கும் அளவிற்கு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
குக்வித் கோமாளி டூ பிக்பாஸ்
இதன்பின் பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட குக்வித் கோமாளி முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் 2 ஆம் ரன்னர் அப் இடத்தினை பிடித்த ரம்யா பாண்டியன் கலக்க போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பணியாற்றினார். இடையில் க்ளாமர் போட்டோஷூட் எடுத்தும் வந்த ரம்யா பாண்டியன் பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
3ஆம் ரன்னர் இடத்தினை பிடித்த ரம்யா பாண்டியன் இந்நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் பட்டாளத்தையே கைக்குள் அடக்கினார். சமீபத்தில் கூட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்குபெற்று அதிலும் 2ஆம் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.
தற்போது தமிழ், மலையாள படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் அடுத்த சமந்தா இடத்தினை பிடிக்கும் அளவிற்கு போட்டோஷூட் எடுத்து ஷாக் கொடுத்துள்ளார் வாய்ப்பிளக்கும் படியான அவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மோசமாக வர்ணித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.