பொதுஇடத்தில் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட சலசலப்பு! தோளோடு நெஞ்சில் சாய்த்த பிக்பாஸ் பாலாஜி.. வீடியோ...
தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் ரம்யா பாண்டியன் பேசப்படும் நடிகையாகாமல் இருந்தார். இதையடுத்து போட்டோஹுட் பக்கம் சென்ற ரம்யா ரசிகர்களை கவரும் வண்ணம் இடுப்பை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்ட்டானார்.
இதையடுத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பின் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டார். தற்போது பல படங்களில் கமிட்டாகி வரும் ரம்யா பாண்டியன் நிகழ்ச்சி, கடை திறப்பு என பிஸியாகி வருகிறார். சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ரம்யா பாண்டியனும், பாலாஜியும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது கடல் அலை போல் சூழ்ந்த ரசிகர் கூட்டத்தால், தள்ளுமுள்ளுவில் சிக்கி கொண்ட ரம்யா பாண்டியனை தோளோடு நெஞ்சில் சாய்த்தபடி காப்பாற்றியுள்ளார் பாலாஜி. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைவைத்து ரம்யா பாண்டியனையும் பாலாஜியும், நெட்டிசன்கள் தாறுமாறாக மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகின்றனர்.
Bala being so protective of Ramya.. & the bond these two share is pure Fraandship Bestie goals... stay the same guys...! Love it ..
— ??? ? (@IamSanjay2607) February 24, 2021
Happy and relieved that Ramya is safe back in the car ??#RamyaPandian #balajimurgadoss @iamramyapandian @OfficialBalaji https://t.co/Y4Yj4EQvJP