இதெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ.. புலம்பிய விஜய் டிவி ரம்யா

Ramya Subramanian
By Parthiban.A Feb 28, 2022 09:28 PM GMT
Report

விஜய் டிவி தொகுப்பாளர் ரம்யா சுப்ரமணியன் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பாப்புலர் ஆனவர் தான். அவர் தற்போது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

பிட்னெஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் தற்போது உடற்பயிற்சி செய்து அதிக அளவு உடல் எடையை குறைத்து இருகிறார். மேலும் அவர் தனது ஒர்கவுட் வீடியோக்களை இன்ஸ்டாக்ராமிலும் வெளியிட்டு வருகிறார் அவர்.

இந்நிலையில் அவர் தற்போது இணையத்தில் பாப்புலர் ஆகி வரும் நின்றுகொண்டே ஷூ போதும் சேலஞ்சில் பங்கேற்று இருக்கிறார். அதில் நின்று கொண்டே காலில் சாக்ஸ் போட்டு ஷூ போட வேண்டும்.

அதை செய்து முடித்த ரம்யா, இதுபோன்ற சேலஞ்சை எல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ என கேட்டிருக்கிறார்.