குடிகார விஜயகாந்த்...கோமாளி சீமான்னு சொல்லி க்லோஸ் பண்ணீங்க..இப்ப விஜய்யா!! நடிகை காட்டம்..
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் கடந்த சனிக்கிழமை அரசியல் பரப்புரை செய்தார். அப்போது கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் விஜய் மற்றும் அவரின் தொண்டர்கள் மீது பலர் கண்டித்தும் விமர்சித்தும் வருகிறார்கள்.
இதுகுறித்து விஜய், முதலமைச்சரே, உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என நினைத்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், அவர்களை எதுவும் செய்யாதீர்கள். நான் வீட்டில் இருப்பேன், இல்லையெனில் அலுவலகத்தில் இருப்பேன், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று கூறி வீடியோவை பகிர்ந்திருந்தார்.
இதுதொடர்பாக விஜய் பேசியதை பார்த்து பலரும் விமர்சித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகை வினோதினி, ஒரு பதிவினை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குடிகார விஜயகாந்த்
அதில், "திராவிடக்கட்சிகளுக்கு எதிரா வந்த எல்லாரையும் எதாவது சொல்லி க்லோஸ் பண்ணூனீங்க… விஜயகாந்த குடிகாரர், கமல் பாஜக பி டீம், சீமான் கோமாளி… மாற்றுக்கட்சின்னு இங்க யாரும் வரவே முடியாத அளவுக்கு, இல்ல வந்தாலும் திராவிடக்கட்சிகளுக்கு ஆதரவா இல்ல அடி பணிஞ்சுதான் இருக்கணும்னு ஆக்கிடாதீங்க" என்று அந்த பதிவில் நடிகை வினோதினி வைத்யநாதன் தெரிவித்துள்ளார்.