விசாரணை முடிஞ்சி அவர் என்கிட்ட பேசுனாரு..இப்போ சொல்லமுடியாது!! ஜாய் கிரிஸில்டா..
ஜாய் கிரிஸில்டா
மாதம்பட்டி ரங்கராஜ், தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் நடித்தவர். சினிமாவில் வெற்றியை காண முடியவில்லை என்றாலும் தனக்கு தெரிந்த சமையல் தொழிலை கையில் எடுத்து அதில் மிக விரைவிலேயே வெற்றியையும் கண்டவர். சமையல் தொழில் அதிக கவனம் செலுத்தியவர், எந்த ஒரு பிரபலத்தின் நிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி என எடுத்தாலும் அதில் இவரது சமையல் தான் அதிகம் இருந்தது.

சமையல் தொழிலில் பிஸியாக இருந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து மிகவும் பேமஸ் ஆனார். ஆனால் தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை பேசும் பொருளாக உள்ளது.
இந்நிலையில், மாநில மகளிர் ஆணையத்தில் 2வது முறையாக விசாரணைக்கு ஆஜரான ஜாய் கிரிஸில்டா, அதன்பின் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியுள்ளார்.
அவர் என்கிட்ட பேசுனாரு
அப்போது, இன்னும் விசாரணை முடியவில்லை, விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை இருவரையும் வரச்சொல்லி இருக்கிறார்கள். அன்றுதான் இறுதியாக என்ன நடக்கப்போகிறது என்று தெரியும். நான் முதல் எந்த முடிவில் இருந்தேனோ, தற்போதும் அதே முடிவில் தான் இருக்கிறேன். வெள்ளிக்கிழமை எல்லாம் தெரிந்துவிடும்.
அது தெரிந்தப்பின் மீடியாவிற்கு நேரடியாக அனைத்தையும் சொல்கிறேன். இன்று இருவரிடமும் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் என்னிடம் பேசியது பற்றி இப்போது சொல்ல முடியாது. இறுதுயாக விசாரணை நடந்து முடிந்தப்பின் வெள்ளிக்கிழமை அனைத்தையும் உங்களிடம் சொல்கிறேன், அது வரைக்கும் காத்திருங்கள் என்று ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார்.