உங்க பணம் எனக்கு வேணாம்!! விஜய்யின் ரூ. 20 லட்சத்தை திருப்பி கொடுத்தப் பெண்..
TVK 20 லட்சம் நிவாரண நிதி
தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கிய 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விஜய் மற்றும் அவரின் கட்சினரை பலரும் விமர்சித்தும் கண்டித்தும் வந்தனர். இதனையடுத்து விஜய் சார்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 20 லட்சம் நிவாரண நிதி அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தார். தற்போது பாதிக்கப்பட்ட ரமேஷ் என்பவரின் மனைவி சங்கவியின் வங்கிக் கணக்கில் கடந்த 19 ஆம் தேதி ரூ. 20 லட்சம் நிவாரண நிதி அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே சங்கவிக்கு தெரியாமல் அவரது உறவினர்கள் 3 பேரை தவெக நிர்வாகிகள் அங்கு அழைத்து சென்றதால் அதிருப்தியடைந்த சங்கவி, விஜய் அனுப்பி வைத்த ரூ. 20 லட்சம் நிதியை பெறப்பட்ட வங்கிக்கணக்கிற்கே திருப்பி அனுப்பியிருக்கிறார்.
உங்க பணம் எனக்கு வேணாம்
இதுதொடர்பாக சங்கவி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூறுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கரூருக்கு வரவில்லை. நான் எதிர்ப்பார்த்தது ஆறுதல் மட்டுமே, பணத்தை அல்ல. இதனால் பணத்தை திருப்பி அனுப்பியுள்ளேன் என்று சங்கவி தெரிவித்துள்ளார்.