சாமிய வெச்சு விஜய்க்கு சாம்பிராணி போட்ட தமன்.. அப்படியே காப்பியடிச்சா எப்படி பாஸ்
ரஞ்சிதமே
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே நேற்று மாலை வெளிவந்தது. செம குத்து பாடலாக அமைத்துள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இப்பாடலை விஜய்யே தனது சொந்த குரலில் பாடியுள்ளார். தொடர்ந்து Youtubeல் பல சாதனைகளை புரிந்து வரும் ரஞ்சிதமே பாடல் நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதற்க்கு காரணமே இசையமைப்பாளர் தமன் தான்.
விஜய்க்கு சாம்பிராணி போட்ட தமன்
ஆம், ஏனென்றால் ரஞ்சிதமே பாடலை மொச்ச கொட்ட பல்லழகி பாடலில் இருந்து காப்பியடித்து போட்டுள்ளார் என்று ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
அதை தொடர்ந்து தற்போது 'கண் திறந்து பாரம்மா' படத்தில் இடம்பெறும் 'உன்னைத்தானே அம்மானு எல்லோருக்கும் சொல்லி வெச்ச' பாடலையும் காப்பியடித்து தான் இந்த பாடலை தமன் இசையமைத்துள்ளார் என்று கலாய்த்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Also this!!! pic.twitter.com/xz9H7lPKMM
— Abhishek Rj (@ABHISHEK15raja) November 5, 2022