தீபிகா படுகோனேவுடன் 5 வருட திருமண வாழ்க்கை!! விவாகரத்து வதந்திக்கு முத்தத்தால் முற்றுப்புள்ளி வைத்த கணவர்..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை தீபிகா படுகோனே. சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.
இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தீபிகா படுகோன் சில வருடங்களுக்கு முன் ரன்பீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தியும் வருகிறார்.
இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் விவாகரத்து பெறவுள்ளதாகவும் பிரபல விமர்சகர் உமைர் சந்து அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனால் சமீபகாலமாக தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கை கண்டுக்கொள்ளாமல் தவிர்த்து வருவதாக பாலிவுட் மீடியாக்களில் கூறப்பட்டு வந்தனர்.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ரன்வீர் சிங், தீபிகாவுக்கு சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் முத்தம் கொடுத்து பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.