காதலுக்கு அந்த விஷயம் தேவையில்லையாம்.. ஓப்பனாக பேசிய ராஷ்மிகா மந்தனா..

love rashmika mandanna
By Kathick Nov 13, 2021 02:27 PM GMT
Report

தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதன்முலம் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் இவர் பெற்றார்.

தமிழில் கார்த்தி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார். மேலும் தற்போது தெலுங்கில் புஷ்பா, ஹிந்தியில் மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகாவிடம், பத்திரிகையாளர் ஒருவர் , " உங்களை விட வயது குறைந்தவரை காதலிப்பீர்களா " என கேட்டிருக்கிறார்.

இதற்கு ராஷ்மிகா, " நம்மை விட இளையவரை காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது. காதலுக்கு வயது ஒரு தடையில்லை, மொழியும் தடையில்லை. அவர் நமது எண்ணங்களை மாற்றாதவராக, நம்மிடம் ஆதிக்கம் செய்யாதவராக இருக்க வேண்டும், " என்று பதிலளித்துள்ளார். இவருடைய இந்த பதில் தற்போது திரை வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.