விஜய்யுடன் டேட்டிங்கில் புஷ்பா பட நடிகை ரஷ்மிகா! வைரலாகும் வீடியோ

pushpa vijaydeverakonda rashmikamandanna
By Edward Dec 21, 2021 08:40 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை என்ற இடத்தினை குறுகிய காலகட்டத்தில் பெற்றவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையாக அறிமுகமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து சில படங்களில் நடித்து வந்தார். இருவரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்து வந்ததால் இருவரும் ஜோடியாக வெளியில் சென்று வந்தனர்.

அவர்கள் சமுகவலைத்தளத்தில் பேசும் உரையாடல்கள் இருவருக்கும் காதல் கிசுகிசு செய்திகளை உருவாக்கியது. இந்நிலையில் புஷ்பா படத்திற்கு பிறகு காதலருடன் மும்பை ஓட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே டேட்டிங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இருப்பதால் தற்போது வெளியில் சென்று டின்னர் சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சிலரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.