பிக் பாஸ் 9 ஷோவில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. வெளிவந்த அதிரடி ப்ரோமோ!
Bigg Boss
Rashmika Mandanna
TV Program
By Bhavya
பிக்பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாக இப்போது 9வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் 8, 9வது சீசன்கள் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் ஆரம்பமானது, நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து போட்டியாளர்களுக்குள் ஒரே சண்டை தான். தமிழில் போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் 9 ஒளிபரப்பாகி வருகிறது.
நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 56 நாட்களை கடந்துள்ளது.
அதிரடி ப்ரோமோ!
இந்நிலையில், பிக் பாஸ் 9 தெலுங்கில் நடிகை ராஷ்மிகா மந்தனா என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் நடித்த Girlfriend படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் சென்றிருக்கிறார். அந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.