பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Shah Rukh Khan Net worth
By Kathick Nov 03, 2025 04:30 AM GMT
Report

கிங் கான், பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ஷாருக்கான். இவருடைய சொத்து மதிப்பு குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதவில் பார்க்கலாம் வாங்க.

ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 12,490 கோடி (1.4 பில்லியன் அமெரிக்க டாலர்) என கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் 33 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் ஷாருக்கான், சினிமா மூலமாக மட்டுமின்றி பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார்.

பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Shah Rukh Khan Net Worth Details

ரெட் சில்லீஸ் என்டர்டைன்மெண்ட் எனும் தயாரிப்பு நிறுவனம் இவருக்கு சொந்தமாக உள்ளது. ஐபிஎல் தொடரில் முன்னனிலையில் உள்ள 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ்' அணியின் இணை உரிமையாளர் ஆவார். இந்த அணி இதுவரை மூன்று முறை கோப்பை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மும்பை, அலிபாக், போன்ற நகர்களிலும், பிரிட்டன், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடிகர் ஷாருக்கான் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார். இந்த வருமானங்கள் அனைத்தும் அவரது சொத்து மதிப்பு ரூ. 12,490 கோடியாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.