ராஷ்மிகா காட்டுல மழை தான்.. கடைசில பாகுபலியவே புடிச்சுடீங்களே

Rashmika Mandanna
By Kathick May 15, 2022 03:30 PM GMT
Report

தென்னிந்திய க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தளபதி 66 படத்தில் முதல் முறையாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் வம்சி இயக்குகிறார்.

இதுமட்டுமின்றி, ஹிந்தியில் அபிதாப் பச்சன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்நிலையில், தளபதி விஜய்யை தொடர்ந்து நடிகர் பிரபாஸுக்கும் ஜோடியாக நடிக்கவுள்ளாராம் ராஷ்மிகா.

ஆம், பிரபாஸ் தற்போது நடிக்கவுள்ள ஸ்பிரிட் எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். தளபதி 66 படத்தின் கால்ஷீட்டிற்கு எந்த ஒரு பாதகமும் வராமல் இருந்தால், பிரபாஸ் படத்தில் ராஷ்மிகா நடிப்பார் என்று கூறப்படுகிறது.