விஜய்யுடன் காதல்!! நிகழ்ச்சியில் வெக்கத்தால் ஓகே செய்த வாரிசு பட நடிகை ராஷ்மிகா..
கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் டாப் நடிகையாக திகழ்ந்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
ஆரம்பத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் பல படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா, அவருடன் ரகசிய காதலில் இருந்து வருவதாகவும் சில நெருக்கமான புகைப்படங்கள் அவுட்டிங் வீடியோக்கள் இணையத்தில் பரவியது.
இதனை தொடர்ந்து, தற்போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.
அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் மூத்த நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி Unstoppable With NBK.
இந்நிகழ்ச்சிக்கு நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் அப்படத்தின் இயக்குனர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது ராஷ்மிகாவை, விஜய் தேவரகொண்டாவுக்கு கால் செய்து பேசும்படி பாலைய்யா கூறியிருக்கிறார்.
உடனே கால் செய்த ராஷ்மிகாவின் அழைப்பை ஏற்ற விஜய் தேவரகொண்டா, What's up rey என்று செல்லமாக கூறியுள்ளார்.
உடனே ராஷ்மிகா வெக்கத்தில் பூரிப்படைந்துள்ளார். அவரின் இந்த ரியாக்ஷனை பார்த்து ஒருவேலை காதல் உண்மைத்தான் என்று கூறி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
"Ask #RashmikaMandanna who is the better hero" 😂#RanbirKapoor
— Lakeer Ka Fakeer (@arthwrites) November 18, 2023
pic.twitter.com/D7dfwcUf5Y