உடல் சூடு அடங்க தூங்கும் முன் இதை தான் செய்வேன்!! பிரபல சீரியல் நடிகை ஓப்பன் டாக்
சின்னத்திரை நடிகைகள் பலர் தனது தனிப்பட்ட விசயங்கள் மற்றும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேட்டிகளில் ஓப்பனாக கூறி வருகிறார்கள். அப்படி சந்திரலேகா சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமான நடிகை ஸ்வேதா பண்டேக்கர் சில விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் படத்தில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்த ஒருசில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். ஆனால் பெரியளவில் அவரின் பெயர் இடம் பெறவில்லை என்பதால் சீரியல் பக்கம் சென்றார் ஸ்வேதா.
நிலா, ரோஜா, மகராசி, அன்பே வா போன்ற சீரியலில் நடித்துள்ள ஸ்வேதா தற்போது ஊர் மரியாதை சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தூங்கும் முன் நீங்கள் செய்யும் விசயத்தை பற்றி கேள்வி எழுந்தது.
அதற்கு அவர், இரவு தூங்கும் முன் எண்ணெய் தேய்த்துக்கோள்வேன். நாள் முழுவதும் ஷூட்டிங் இருப்பதால் உடல் சூடாகி இருக்கும். அந்த சூட்டை குறைக்க எண்ணெய் வைத்து தூங்கிக்கொண்டால் சூடு குறையும் என்று கூறியிருக்கிறார் ஸ்வேதா பண்டேக்கர். சமீபத்தில் ஸ்வேதாவுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.