56 வயது நடிகரை கழட்டிவிட்ட ராஷ்மிகா! அவருக்கு ஜோடியாக நடிக்க முடியாது

Rashmika Mandanna
By Parthiban.A Oct 18, 2022 03:30 PM GMT
Report

ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா தான் தற்போது இந்திய அளவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். அவர் தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அது மட்டுமின்றி அடுத்து அவர் ஹிந்தியில் சில படங்கள் நடித்து வருகிறார்.


இந்நிலையில் அடுத்து அவர் சீயான் விக்ரமின் 61வது படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் தற்போது திடீரென அந்த படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவருக்கு பதிலாக மாளவிகா மோகனன் தேர்வாகி இருக்கிறார்.

56 வயது நடிகரை கழட்டிவிட்ட ராஷ்மிகா! அவருக்கு ஜோடியாக நடிக்க முடியாது | Rashmika Mandanna Out Of Chiyaan 61 Movie

காரணம் என்ன?

ராஷ்மிகா தற்போது இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில் மூத்த நடிகரான விக்ரமுடன் நடிக்க யோசிக்கிறாரோ என கேள்வி எழுந்திருக்கிறது.

ஆனால் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்கள் காரணமாக, தற்போது தொடங்கி இருக்கும் சீயான் 61க்கு தேதிகள் ஒதுக்க முடியவில்லை என்பதால் தான் அவர் வெளியேறினார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

உண்மை காரணம் என்ன என்பதை ராஷ்மிகா தான் சொல்ல வேண்டும். 

GalleryGallery