பிச்சை கேட்ட குழந்தையிடம் இப்படியா நடந்துகொள்வது.. ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
புஷ்பா படத்திற்கு பிறகு இந்தியாவே திரும்பி பார்க்கும் சென்சேஷன் நடிகையாக மாறிவிட்டார் ராஷ்மிகா மந்தனா. அவரது சாமே சாமே ஸ்டெப் தான் தற்போது இணையத்தில் லேட்டஸ்ட் ட்ரெண்ட். சமீபத்தில் ராஷ்மிகா மும்பைக்கு சென்று இருந்தார். அவர் ஏர்போர்ட்டில் வந்திறங்கிய உடை மிக சின்னதாக இருந்தததாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
அதன் பின் அவர் இயக்குனர் கரண் ஜோகர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வரும் போட்டோவும் வைரல் ஆகி இருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீடியோ வெளிவந்து இருக்கிறது. ஒரு ஹோட்டலில் இருந்து ராஷ்மிகா வெளியில் வருகிறார். அப்போது அங்கிருக்கும் குழந்தை ஒருவர் தனக்கு பசிக்கிறது என சொல்லி எதாவது தரும்படி கேட்டிருக்கிறார்.
ஆனால் ராஷ்மிகா அதை சுத்தமாக கண்டுகொள்ளாமல் தன்னிடம் எதுவும் இல்லை என சொல்லி கிளம்பி செல்கிறார். அவர் காரில் ஏறி அமர்ந்தபிறகும் சில குழந்தைகள தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஆனாலும் அவர்களுக்கு டாட்டா மட்டும் காட்டிவிட்டு சென்றிருக்கிறார்.
அந்த ஏழை குழந்தைகளை விட ராஷ்மிகா ஏழை போல என நெட்டிசன்கள் ராஷ்மிகாவை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். அவர் இடத்தில் வேறு நடிகர்கள் இருந்திருந்தால் அந்த குழந்தைகளுக்கு சாப்பாடாவது வாங்கி கொடுத்து விட்டு சென்றிருப்பார்கள் என்றும் நெட்டிசன்கள் கூறி இருக்கின்றனர்.