ராஷ்மிகாவா இல்லை கோவை சரளாவா? கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்
Vijay
Rashmika Mandanna
By Kathick
நேற்று மாலை வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே எனும் முதல் பாடல் வெளிவந்தது. விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ள இந்த பாடல் Youtubeல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
அதே நேரத்தில் நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது. ரஞ்சிதமே பாடல் காப்பி என்று கூறி சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், ராஷ்மிகாவையும் ட்ரோல் செய்ய துவங்கியுள்ளார்கள்.
ஆம், ரஞ்சிதமே பாடலில் ராஷ்மிகாவை பார்ப்பதற்கு, கரகாட்டம் படத்தில் வரும் கோவை சரளா போல் இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த ட்ரோல் புகைப்படம்..