வாழ்ந்து என்ன பயன்!! இதெல்லாம் தேவைதான்.. ராஷ்மிகா சொன்ன ரகசியம்
ராஷ்மிகா மந்தனா
தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக தற்போது வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
ராஷ்மிகா தெலுங்கு ஹீரோ விஜய் தேவர்கொண்டா உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வரும் தகவல் எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர்கள் ஜோடியாக வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று வரும் புகைப்படங்கள் ஆதாரங்களுடன் அடிக்கடி வெளியாகி வைரல் ஆகின்றன.
சமீபத்தில், ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படமும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. இந்நிலையில், ராஷ்மிகா காதல் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.
ரகசியம்
அதில், "ஒரு உறவில் மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது ஒருவரையொருவர் மதிப்பது தான். பார்ட்னரிடம் நேர்மையாகவும், கவனத்துடனும் இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருவரின் துணை அவசியம். துணை இல்லாமல் இந்த வாழ்க்கையை வாழ்வதில் என்ன பயன் இருக்கிறது.
ஒரு உறவில் அன்பு, அக்கறை, உண்மை போன்ற விஷயங்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனக்கு இந்த குணங்கள் இயல்பாகவே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.