விஜய் தேவரகொண்டாவுடன் ரகசிய திருமணம் முடிந்ததா!! நடிகை ராஷ்மிகா மந்தனா கொடுத்த அதிர்ச்சி பதில்..
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாகவும் இருவரும் ரகசியமாக அவுட்டிங் சென்று வருவதாகவும் செய்திகள் வெளியானது. இதற்கு மறைமுகமாக பலமுறை ராஷ்மிகா பதிலளித்து வந்தார்.
நேற்று அவரது 27வது பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் ராஷ்மிகா, கையில் புது மோதிரம் போடு ஒரு ஓட்டலில் இருந்தபடி பேசியிருக்கிறார்.
அந்த வீடியோவை பார்த்த தனியார் ஊடகம் ஒன்று, ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா இருவரும் டேட்டிங் செய்வது அதிகாரப்பூர்வமாகியதாகவும் விஜய் தேவரகொண்டாவுக்கு விருப்பமான மோதிரத்தை ராஷ்மிகா கையில் போட்டுள்ளார் என்றும் இருவரும் ஒரே வீட்டில் இருந்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதனை பார்த்த ராஷ்மிகா மந்தனா, அய்யோ, ரொம்ப அதீதமான கற்பனை செய்கிறீர்கள் என்று பதிலளித்துள்ளார். வீடியோ ஆரம்பத்தில் மோதிரம் தெரிவதை கண்ட ராஷ்மிகா அடுத்த நொடியே மறைத்துள்ளார். இதனை நெட்டிசன்கள் கவனித்து ஏன் அதை மறைக்கிறீர்கள் என்றும் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
Aiyoooo.. don’t over think it babu.. ?❤️
— Rashmika Mandanna (@iamRashmika) April 6, 2023