ஜோடியாக பாரின் ட்ரிப்.. வசமாக மாட்டிக்கொண்ட ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருகிறார்கள் என நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஜோடி இது குறித்து இதுவரை வாய்திறக்க வில்லை, அதே நேரத்தில் மறுக்கவும் இல்லை.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் தனது படங்களில் தற்போது பிஸியாக நடித்து கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் அடிக்கடி இருவரும் ஒன்றாக வலம் வரும் புகைப்படங்களை இணையத்தில் நம்மால் காண முடிகிறது.
போட்டோஸ்
இந்நிலையில், ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஓமன் நாட்டில் உள்ள கடற்கரை ஓரம் அமைந்துள்ள ரிசார்ட்டில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா அவர் தனியாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதே போன்று விஜய் தேவரகொண்டாவும் பகிர்ந்திருந்தார். இந்த இருவரின் புகைப்படத்திலும் சில ஒற்றுமைகள் உள்ளது.
அதாவது, இருவரின் பின்னால் இருக்கும் லொகேஷன் ஒரே மாதிரி உள்ளது. இதனால் இவர்கள் இருவரும் ஒன்றாக தான் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர் என்று ரசிகர்கள் உறுதி செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.