ரஜினிக்கு பயந்து தெறித்து ஓடினாரா ரத்னகுமார்..அவரே சொன்ன காரணத்தை பாருங்க
Rajinikanth
Tamil Cinema
Actors
Tamil Actors
By Dhiviyarajan
மேயாத மான் படத்தின் மூலம் பிரபல இயக்குனராக மாறியவர் தான் ரத்னகுமார். இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர், லியோ திரைப்படத்திற்கு இணை எழுத்தாளராக இருக்கிறார்.
நேற்று நடந்த லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரத்னகுமார், எவ்வளவு உயர பறந்தாலும், பசிச்சா கீழ இறங்கி வந்துதான் ஆகணும் என்று கூறியுள்ளார். இது சூப்பர் ஸ்டார் ரஜினியைதான் மறைமுகமாக கிண்டல் செய்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரத்னகுமார் தனது சோசியல் மீடியா பக்கத்தில், நான் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகபோகிறேன். என்னுடைய அடுத்த படம் அறிவிப்பு வரை ஆஃப் லைன் செல்கிறேன் என்று ரத்னகுமார் பதிவிட்டு இருக்கிறார்.
ஆனால் ரத்னகுமார் ரஜினிக்கு பயந்து தான் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார் என்று ரஜினி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர் .