விஜய் மகன் சஞ்சய்யை காதலிக்கிறேனா!! பிக்பாஸ் நடிகை ரவீனா தாஹா கூறிய உண்மை..
ஜில்லா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரவீனா தாஹா. ராட்சசன் படத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
அதன்பின் மெளன ராகம் சீரியல் லீட் ரோலில் நடித்து வரவேற்பை பெற்றார். ஒருசில நிகழ்ச்சிகளில் நடித்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வந்த ரவீனா, தற்போது பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

பிக் பாஸ் வீடும் அதுவும் ஒன்னு !..கமல் சாருக்கு இது கூட தெரியலையே.. உலக நாயகனை பொளந்து கட்டிய ரேகா நாயர்
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை காதலிப்பதாக செய்திகள் பரவியது குறித்து பேசியுள்ளார்.
அந்த செய்தி பற்றி என் நண்பர்கள் கூறினார்கள். அதை பார்த்து என்ன கொடுமை இது என்றாகிவிட்டது.
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்பதால் அவருடன் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அப்படி நடிக்க வாய்ப்பில்லை என்பதால் அவரது மகன் நடிக்க ஆரம்பித்தால் அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தான் கூறினேன்.
அதை இப்படி தவறாக புரிர்ந்து காதலிப்பதாக கூறி பரப்பிவிட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார் ரவீனா தாஹா.