நம்ப வைத்து ஏமாற்றிய ரவீனா தாஹா!! தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி..
ரவீனா தாஹா
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் ரவீதா தாஹா. மெளன ராஜாம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ஒருசில படங்களில் நடித்திருந்த ரவீனா, பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு 91 நாட்களுக்கு பின் எவிக்ட்டாகி வெளியேறினார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகலில் கோமாளியாகவும் கலந்து கொண்டு ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் 1 ரன்னர் அப் இடத்தையும் பிடித்தார்.
தயாரிப்பாளர் சங்கம்
இந்நிலையில் ரவீதா தாஹாவுக்கு 2 ஆண்டுகள் நடிக்கக்கூடாது என்று தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் விஜய் டிவியில் உருவாகி ஒளிப்பரப்பாகி வரும் சிந்து பைரவி சீரியலில் முதலில் அவர் தான் நடிக்க கமிட்டாகியிருந்தார். அவர் கமிட்டான போதே இரு கதாநாயகிகள் சீரியலில் இருப்பதால் அதற்கு ஓகே என்றால் நடிக்கலாம் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ரவீனாவும் அதற்கு ஓகே சொல்லிவிட்டு சீரியல் பிரமோ வீடியோவிலும் நடித்துக் கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 15 நாட்கள் ஷூட்டிங் சென்றப்பின் சீரியலில் நடிக்க விருப்பம் இல்லை என்று ரவீனா கூறி சீரியல் குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
சுமார் 100 எபிசோட் நடித்துக் கொடுக்க கேட்டும் ரவீனா வராமல் காஷ்மீருக்கு சென்றுள்ளார். இதனால் தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரவீனா மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்கப்பட்டது.
இதன்மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி சின்னத்திரைகளில் நடிக்க இரு ஆண்டுகளுக்கு யாரும் ஒத்துழைப்பு செய்யக்கூடாது என்றும் தயாரிப்பாளர்களின் நலனை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இப்படியான நிலையில் பிரகாஷ் என்பவருடன் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இது தற்போது பிரச்சனையாகி நடன நிகழ்ச்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.