அரபிக் குத்துக்கு விஜய் பையனோட ஆடாம பாட்டி கூட ஆடுற! 17 வயது சீரியல் நடிகை

serial raveenadaha mounaraagam arabickuthu
By Edward Mar 04, 2022 07:04 AM GMT
Report

நடிகர் விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தில் குட்டி நட்சத்திரமாக நடித்தவர் ரவீனா தாஹா. இதையடுத்து ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருப்பார். அப்படத்தின் மூலம் ஒருசில குட்டி நட்சத்திரங்கள் பிரபலமானதை போன்று ரவீனாவும் பிரபலமாகினார்.

அதை பயன்படுத்திய ரவீனா டிக்டாக் வீடியோக்கள் செய்து இணையத்தில் வெளியிட்டும் இடையில் ஹாட் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.. அதன்மூலம் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் மெளன ராகம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஹீரோயினாக நடித்தால் அது விஜய் மகன் சஞ்சயுடன் தான் என்று கூறியிருந்தார். இதை விஜய் மகன் காதலி என்று கூறி இணையத்தில் செய்திகள் பரவியது. இந்நிலையில் விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு பலர் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதற்கு ரவீனா தாஹாவும் தன் பாணியில் குத்தாட்டம் போட்டும் மெளன ராகம் சீரியல் பாட்டியுடனும் அரபிக் குத்துக்கு ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இப்படி விஜய் மகனுக்கு ரூட்டை போட ரவீனா பிளானோ என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.