விஜய்க்காக 16 ஆண்டுகளாக காத்திருக்கும் இயக்குனர்! ஒதுக்கி வைக்கும் தளபதி..
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய். இவர் படத்தில் நடிப்பதைவிட தற்போது இயக்குவதற்கு பலர் போட்டிபோட்டு வருகிறார்கள். தற்போது பீஸ்ட் படத்தில் பிஸியாக இருக்கும் சமயத்திலேயே தளபதி66 படத்தையும் இயக்குனர் வம்சி என புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார்.
அவரை அடுத்து வெற்றிமாறன் தான் தளபதி 67ஐ இயக்கவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியது. இந்நிலையில் காமெடி மற்றும் வில்லன் நடிகர் ரவி மரியா இயக்குனர் பேரரசு பற்றிய உண்மைகளை கூறியுள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் நான் துணைத்தலைவராகவும் பேரரசு பொருளாலராகவும் பணியாற்றி வருகிறார்.
தினமும் நாங்கள் இருவரும் போனில் பேசி வருகிறோம். விஜய்யை வைத்து இரு வெற்றிப்படங்களை கொடுத்தப்பின் 23 மணிநேரம் விஜய் பற்றியே நினைத்து தளபதியை இயக்க வேண்டும் என்பதற்காக கதையை எழுதி வருகிறார் என்று கூறியுள்ளார்.
.@ARASUPERARASU ??? pic.twitter.com/pCS1RNnfCd
— VTL Team (@VTLTeam) December 18, 2021