ஒரே காரில் தான் போவோம்.. நான் நடிகை அம்பிகாவின் புருஷன் கிடையாது!! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த நடிகர்..

Ambika Gossip Today Tamil Actress
By Edward Jul 02, 2024 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 80, 90 காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை அம்பிகா. தற்போது சினிமாவில் குணச்சித்திர ரோலில் சீரியலில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் என்னை அம்பிகாவின் கணவர் என்று கூறி வருகிறார் என்று நடிகர் ரவிகாந்த் முதன் முறையாக ஒரு தகவலை கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஒரே காரில் தான் போவோம்.. நான் நடிகை அம்பிகாவின் புருஷன் கிடையாது!! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த நடிகர்.. | Ravikanth First Time Reveals Iam Ambika Husband

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், என்னை பற்றி பல வதந்திகள் வெளியாகியது. இதனால் மக்கள் உங்களுக்கு என்ன வரப்போகிறது. நான் ஒரு உண்மையை கூறுகிறேன். என்னை அம்பிகாவின் கணவர் என்று செய்திகள் வெளியானது. நானும் அம்பிகாவும் 4 மொழிகளில் கிட்டத்தட்ட 16 படங்களில் கணவன் - மனைவியாக நடித்திருக்கிறோம்.

எங்களுடைய வீடு பக்கத்து பக்கத்து வீடு. அதுக்கு எதுக்கு ரெண்டு வண்டியில் போகணும் என்று ஒரே வண்டியில் போவோம். செட்டுக்கு ஒன்றாக போனதும், செட்டில் புருஷனும் பொண்டாட்டியும் வந்துட்டாங்க ஷாட்டுக்கு போலாம்னு சொல்லுவாங்க, இதை பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள், அதுதான் நடக்கிறது.

ஒரே காரில் தான் போவோம்.. நான் நடிகை அம்பிகாவின் புருஷன் கிடையாது!! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த நடிகர்.. | Ravikanth First Time Reveals Iam Ambika Husband

அந்த பொண்ணு பாவம் அமெரிக்காவில் பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்து ராம் குமார், ரிஷி குமார் என்ற மகன்களை பெற்று நிம்மதியாக அங்க இருக்காங்க. சீன் வரும் போது இங்க வந்து நடிச்சிட்டு போங்க. இதுதான் உண்மை, தயவு செய்து சோசியல் மீடியாவில் வரும் செய்திகளை யாரும் நம்பாதிங்க என்று ரவிகாந்த் தெரிவித்துள்ளார்.

பொறுப்பு துறப்பு : குறித்த அம்பிகாவின் தகவலை நடிகர் ரவிகாந்த், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்து கூறியதே தவிர, இந்த தகவலுக்கு விடுப்பு தளத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை.

Gallery