எங்களை நிம்மதியாக இருக்கவிடுங்கள்.. அம்பிகா கணவர்-னு சொல்லாதீங்க, விட்ருங்க!! நடிகர் ரவிகாந்த் கோபம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 80, 90 காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை அம்பிகா. தற்போது சினிமாவில் குணச்சித்திர ரோலில் சீரியலில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் என்னை அம்பிகாவின் கணவர் என்று கூறி வருகிறார் என்று நடிகர் ரவிகாந்த் முதன் முறையாக ஒரு தகவலை கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
எங்களுடைய வீடு பக்கத்து பக்கத்து வீடு. அதுக்கு எதுக்கு ரெண்டு வண்டியில் போகணும் என்று ஒரே வண்டியில் போவோம். செட்டுக்கு ஒன்றாக போனதும், செட்டில் புருஷனும் பொண்டாட்டியும் வந்துட்டாங்க ஷாட்டுக்கு போலாம்னு சொல்லுவாங்க, இதை பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள், அதுதான் நடக்கிறது, அந்த பொண்ணு பாவம் அமெரிக்காவில் பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்து ராம் குமார், ரிஷி குமார் என்ற மகன்களை பெற்று நிம்மதியாக அங்க இருக்காங்க. சீன் வரும் போது இங்க வந்து நடிச்சிட்டு போங்க. இதுதான் உண்மை என்று கூறியிருந்தார்.
நடிகர் ரவிகாந்த் பேட்டி
அதேபோல் வேறொரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் ரவிகாந்த், அம்பிகாவும் நானும் பல படங்களில் எனக்கு மனைவியாக நடித்தார். இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தோம், ஒன்றாக ஷூட்டிங்கிற்கு செல்வோம். பத்திரிக்கையாளர், மக்கள் இதுபோன்ற விசயங்களை விரும்புவார்கள் என்பதற்காக இதுபோல் எழுத்துவிட்டார்கள். அந்த பொண்ணு பாவம் கல்யாணம் பண்ணி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.
அவங்க கணவர் பெயர் பிரேம்குமார், இதையே இன்னொரு நடிகர் தப்பாக சொல்லியிருந்தார். அவரிடம் அது தப்பு என்று கூப்பிட்டு சொல்லிவிட்டேன். ஷூட்டிங் நடக்கும் போது இங்க வந்து நடித்துவிட்டு போய்விடுவார்கள். இது தான் உண்மை. நான் நிறைய நடிகைகளுடன் நடித்திருக்கிறேன், எல்லாருக்கும் கணவர் என்றால் எங்க போறது.
நடிகர்கள் பற்றி எழுதுங்கள், ஆனால், எது உண்மை எது பொய்-னு தெரியாமல் எங்க வாழ்க்கையை கெடுக்காதீர்கள். இதுபற்றி அம்பிகா கவலைப்படவில்லை. எங்களை பற்றி தப்புத்தப்பாக எழுதுவார்கள், மக்கள் நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள். எங்களை நிம்மதியாக இருக்கவிடுங்கள் என்று ரவிகாந்த் தெரிவித்துள்ளார்.