மகாலட்சுமிக்கு இரவுநேரத்தில் ரவீந்தர் வாங்கி கொடுத்த பிறந்தநாள் பரிசு!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

Ravindar Chandrasekaran Mahalakshmi
By Edward Mar 21, 2023 06:30 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக பல ஆண்டுகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி. கடந்த ஆண்டு பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை இரு ஆண்டுகள் ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் விமர்சனத்திற்குள்ளாகினாலும் அதை துளிக்கூட கண்டுகொள்ளாமல் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். மகாலட்சுமி சீரியல் மற்றும் விளம்பரங்களில் கவனம் செலுத்தியும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படத்தையும் பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் மகாலட்சுமி இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். ஆசை மனைவிக்கு மாலை நேரத்தில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் ரவீந்தர்.

மேலும் வெறும் மல்லிப்பூவை பரிசாக அளித்து பிறந்தநாளுக்கு கவிதையில் ஒரு பதிவினையும் போட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

மனைவிக்கு மல்லிப்பூ வாங்கி கொடுத்ததை பலர் கிண்டல் செய்து வாழ்த்துக்களை கூறியும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.