கவின் படத்தால் ரவீந்தருக்கு ஏற்பட்ட முதல் விவாகரத்து.. இந்த தொழில்தான் இரண்டாவது மனைவிக்கும் பிரச்சனை..
லிப்ரா நிறுவனத்தின் தயாரிப்பாளராக ரவிந்தர் சந்திரசேகர் கடந்த வாரம் சீரியல் நடிகை மகாலட்சுமியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இணையத்தில் விமர்சிக்கப்பட்டு ட்ரெண்டானது. திருமணம் பற்றி விளக்கங்களை பல ஊடகங்களுக்கு பேட்டியளித்து பகிர்ந்து கொண்டனர்.

ஹானிமூன், குலதெய்வ பூஜை என்று காதல் ஜோடிகள் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், ரவிந்தரின் தொழில் தான் எனக்கு பிரச்சனையாக இருப்பதாகவும் தயாரிப்பாளராக இருந்ததால் தான் அவரை திருமணம் செய்து கொண்டதை பெரியதாக்கிவிட்டார்கள்.
அந்த தொழிலில் இல்லை என்றால் இந்த பிரச்சனை விமர்சனம் வந்திருக்காது என்று மகாலட்சுமி சமீபத்திய பேட்டியொன்றில் கூறியிருந்தார். இதேபோல் தான் ரவிந்தரின் முதல் மனைவியும் அவரின் தொழில் பிடிக்கவில்லை என்று அவரை விட்டு சென்றுவிட்டதாக ரவிந்தரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் ரவீந்தரின் முதல் மனைவி விவாகரத்து பெற நடிகர் கவின் நடித்த படமும் காரணமாம். அதாவது ரவீந்தர் தயாரித்த படம் நட்புனா என்னனு சொல்லுமா.
இப்படத்தில் கவின், ராஜு ஜெயமோகன் நடித்து படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியால் பல நஷ்டம் ஆனதால் 2019க்கு பிறகு முதல் மனைவி அவரைவிட்டு விலக காரணமாக அமைந்ததாம்.