13 லட்சம் கொடுத்து ஏஜெண்ட் மூலம் ஓட்டு வாங்கிய விஜே.. தயாரிப்பாளர் ரவீந்தர் ஓப்பன் டாக்..
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 106 நாட்களாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் 7. கடந்த ஞாயிற்று கிழமை, கமல் ஹாசன் இறுதி நாளை நிறைவு செய்திருந்தார். அர்ச்சனா டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்டு 50 லட்சம் தொகை உள்ளிட்ட பல பரிசுகளை தட்டிச் சென்றார். இரண்டாம் இடம் மணியும், 3 ஆம் இடம் மாயாவும் பிடித்திருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்து வெற்றிப்பெற்றவர்கள் கொண்டாடி வரும் நிலையில் பிக்பாஸ் விமர்சித்து வருபவரும் தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர், அர்ச்சனாவின் PR வேலைகளை புட்டுபுட்டு வைத்திருக்கிறார்.
அதாவது மாயா எப்படி தோற்றார் தெரியுமா, மூன்று லைட்டில் ஒரு லைட் எறியவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் வேறொரு முக்கிய தகவல் எனக்கு தெரிய வந்திருக்கிறது. ஒருத்தர் என்னிடம் ரவீ சார் அர்ச்சனா வின் பண்ணிட்டாங்கன்னு. அதற்கு நான் சொன்னேன்.
தம்பி ஏஜெண்ட் காரன் 13 லட்சம் பில்லோடு சுத்திக்கிட்டு இருக்கான், முதல்ல அதை கிளியர் பண்ணு, வின் பண்ணது அந்த ஏஜென்ஸ்சி என்று கூறினேன். வாங்கிய 50 லட்சத்தில் ஜிஎஸ்டி போக 30 லட்சம் இருப்பதை PRக்கு செட்டில்மெண்ட். அதுவும் அந்த தொகை அர்ச்சனா கணக்கிற்கு வர 6 மாதம் ஆகும். அர்ச்சனாவுக்கு கார் கொடுக்கிறார்கள்.
டிஜிட்டல் முறையில் மொபைல் போன் வாக்குகளை ஏற்ற முடியும். இது அவர்கள் செய்தார்களா என்று பார்க்காமல் சொல்ல முடியாது. ஆனால் வாக்குகளை இந்த முறையில் நடத்துவார்கள் என்று ரவீந்தர் தெரிவித்திருக்கிறார்.
இதனை வைத்து நெட்டிசன்கள், அர்ச்சனாவுக்கு ஓட்டு வந்ததே பிரதீப் ரசிகர்களின் ஆதரவு தான் என்று கூறியுள்ளார். ஆனால் தினேஷ் இதனை நேர்மையாக செய்தார்.
So maya eviction is not on VOTE failure only bulb failure!! Athana Parthen ….
— Ravindhar Chandrasekaran (@fatmanravi) January 14, 2024