காதல் மனைவியாலே போலீசாரிடம் மாட்டிய ரவீந்தர்.. மோசடியால் கைது!
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பலரும் மோசமாக விமர்சித்தனர்.
அப்போது ரவீந்தர் தங்களுடைய திருமணம் பற்றி வந்த மோசமான விமர்சனங்களுக்கு ரிப்லே கொடுக்கும் வகையில், என் மனைவி இறைவன் கொடுத்த வரம் என்று ஒரு பதிவையும் போட்டிருந்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் ரவீந்தர் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று கூறி பாலாஜி என்பவரிடம் இருந்து ரூபாய் 16 கோடி வரை பணத்தை வாங்கி ஏமாற்றி இருக்கிறார். இதைத்தொடர்ந்து பாலாஜி கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவீந்தரை போலீசார் தேடிவந்துள்னர்.
அப்போது ரவீந்தர் தன்னுடைய மனைவியை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் தன் அலுவலகத்திற்கு ரவீந்தர் வந்திருக்கிறார். சரியான நேரத்தை நோக்கி காத்திருந்த போலீசார்.ரவீந்தரை கைது செய்துள்ளனர். இந்த விஷயத்தால் மகாலட்சுமி மனவுளைச்சலில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
You May Like This Video