முத்தக்காட்சிக்கு 36 ரீ-டேக்!! நடிகையுடன் நெருக்கம் காட்டிய ஹீரோவை பிரிந்த மனைவி...

Gossip Today Actors Divorce Actress
By Jai Jul 25, 2026 05:30 AM GMT
Report

ஹீரோவை பிரிந்த மனைவி

சினிமாவில் இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் வலம் வந்த பிரபலம், சமீபத்தில் தன்னுடைய திரைப்பயணத்தின் உச்சக்கட்ட சாதனையை அடைந்தார். தொழிலில் தொட்டதெல்லான் பொன்னாக மாறினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விவாகரத்து தான் இன்னும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக இருக்கிறது. தோழியை காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்தவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

முத்தக்காட்சிக்கு 36 ரீ-டேக்!! நடிகையுடன் நெருக்கம் காட்டிய ஹீரோவை பிரிந்த மனைவி... | Real Reason Behind Music Directors Divorce

ஆனால் யாரும் எதிர்பார்த்திராத வகையில் இருவரும் பரஸ்வரமாக பிரிவதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவுக்கு காரணம் என்ன என்று தெரியாததால் சினிமா பிரபலம் ஒருவர் பகீர் தகவலை உடைத்துள்ளார். இசையமைப்பாளர், தன் தந்தை மற்றும் தங்கையுடன் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தபோது மனைவிக்கும் தங்கைக்கும் சண்டை வர, மனமுடைந்த மனைவி தனிக்ல்குடித்தனம் போனலாம் என்று பலமுறை கூறியிருக்கிறார்.

தன்னுடைய குடும்பத்தை விட்டுவர அந்த பிரபலம் விரும்பவில்லை என்பதால் இருவருக்குள்ளும் மன விரிசல் ஏற்பட்டுள்ளது. இசையமைப்பாளராக அவர் இருக்கும்போது எந்த பிரச்சனையும் வரவில்லை, ஆனால் ஹீரோ அவதாரம் எடுத்தது மனைவிக்கு பிடிக்கவில்லையாம். தன்னுடன் நடித்த இளம் நடிகைகளுடன் நெருக்கம் காட்டி நடித்தது மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

முத்தக்காட்சிக்கு 36 ரீ-டேக்!! நடிகையுடன் நெருக்கம் காட்டிய ஹீரோவை பிரிந்த மனைவி... | Real Reason Behind Music Directors Divorce

முத்தக்காட்சிக்கு 36 ரீ-டேக்

குறிப்பாக அடல்ட் காமெடி படத்தில் பிளேபாய் ரோலில் நடித்தவர் ஷூட்டிங்கில் ஒரு இளம் நடிகைக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்துள்ளார். இந்த காட்சிக்கு மட்டும் ஹீரோ, 36 ரீ-டேக்குகள் எடுத்துள்ளார். இந்த விஷயம் மனைவி காதுக்கு வந்தது சினிமாவுக்காக நடிக்கிறீர்களா? இல்லை நிஜமாகவே என் ஜாய் செய்கிறீர்களா? என்று சண்டை போட்டுள்ளார். அந்த முத்தக் காட்சியில் தொடங்கி சின்ன சலசலப்பு, போகப்போக குடும்பத் தகராறு உருவெடுக்க இறுதியில் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றுள்ளனர் என்று அந்த பிரபலம் கூறியுள்ளார்.