தொகுப்பாளினி DD விவாகரத்திற்கு காரணம் அந்த ஒரு விஷயம் தான்!..பரபரப்பை ஏற்படுத்தும் பிரபலம்
விஜய் டிவியில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்சினி.
இவர் 21 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி பவர்பாண்டி,சர்வமும் தாளமயம் போன்ற சில படங்களில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
கடந்த 2014 -ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
நடிகை நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், தற்போது டிடியின் விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், " டிடி சில ஆண்டுகளிலேயே ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்தார். அதற்கு காரணம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் தெரிந்துகொள்ளாமல் பாடி டிமாண்ட் காரணமாக திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்து கொள்கிறார்கள்" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.