அந்த மாதிரி கண்டிஷன் போட்ட ஐஸ்வர்யா ராய்.. அழகுக்கு மயங்காத நடிகர் அஜித்
ஐஸ்வர்யா ராய்
உலகமெங்கும் வசீகர அழகால் மயக்கியவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் ஆரம்பத்தில் பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இவர் நடிப்பில் இயக்குனர் ராஜ்குமார் 2000 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படத்தில் மம்முட்டி, அஜித் குமார், தபு, அப்பாஸ், மணிவண்ணன் என பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியா தபு நடித்திருப்பார். ஆனால் முதலில் ஐஸ்வர்யா ராய் தான் நடிக்க இருந்தது.
ஐஸ்வர்யா ராய் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க சில கண்டிஷன் போட்டுள்ளார். அது என்னவென்றால் அஜித் தாடியை சேவ் செய்தால் தான் அவருடன் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு அஜித், நான் மற்றவர்களுக்காக என்னை மாற்றி கொள்ளமாட்டேன் என்று கூறிவிட்டாராம். அதன் பின்னர் ஐஸ்வர்யா ராய் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
