ஒரு பொண்ணோட வாழ்க்கைய சீரழிச்சவன் தானே நீ? நிக்ஷனை பிரதீப் திட்ட இதான் காரணம்..
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது மிகப்பெரியளவில் பேசப்பட்டு வர காரணம் ரெட் கார்ட் மூலம் கமல் ஹாசனால் பிரதீப் வெளியேற்றப்பட்டதான். பெண்களின் பாதுகாப்பிற்கு அவரால் பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தை பலர் கூறியதால் இந்த முடிவெடுத்த நிலையில் சிலர் பிரதீப்பிற்கு எதிராகவும் ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.
இதற்கிடையில், சனிக்கிழமை நிகழ்ச்சியில் பிரதீப் மீது போட்டியாளர்கள் புகாரளித்திருந்த நிலையில், நிக்ஷனை பார்த்து பிரதீப், ஒரு பொண்ணோட வாழ்க்கைய சீரழிச்சவன்தானே நீ? என்று கூறி அசிங்கப்படுத்தினார். ஆனால் பிரதீப் எதற்கு இதை கூறினார் என்று யாருக்கும் புதிராக இருந்தது.
இந்நிலையில் ஐஸு - நிக்ஷன் காதல் ரூட்டினை பார்த்த ஐஸுவின் குடும்பத்தினர், பிக்பாஸ் வீட்டிற்கே சென்றுள்ளனர்.
முத்த விவகாரத்தில் பெற்றோர்கள் வருத்தத்தில் இருந்ததால் இரு தினங்களுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டிற்கு சென்று, கண்ணாடி வழியே அவங்க ரெண்டு பேரும் சோகத்தில் இருந்ததாகவும், குடும்ப மானம் போகுது.
இனிமேல் ஒருநாள் கூட இந்த நிகழ்ச்சியில் என் பொண்ணு இருக்க வேண்டாம். தயவு செய்து வெளியில் அனுப்பிடுங்கன்னு நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் அழுதுள்ளார்களாம்.
எமர்ஜென்சி காரணம் இல்லாமல் போட்டியாளர்கள் திடீர்னு செல்ல முடியாது என்று சமாதானப்படுத்தி இருக்கிறார்கள்.
இதுபற்றி இருவரிடமும் உங்கள் சார்பில் பேசுகிறோம் என்று சேனல் தரப்பு சொல்ல பெற்றோர்கள் சென்றிருக்கிறார்களாம். இந்த விசயத்தால் தான் பிரதீப், நிக்ஷனை திட்டியதாக இணையத்தில் பலர் கூறி வருகிறார்கள்.