பிரசாந்த்திற்கு எதிராக சினிமாவில் நடக்கும் துரோகங்கள்.. மனமுடைந்த குடும்பம்
தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். அப்போதைய காலகட்டத்தில் அஜித், விஜய்யை காட்டிலும் முன்னணி நடிகராகவே இருந்தார்.
இவர் 1990 -ம் ஆண்டு வெளியான "வைகாசி பொறந்தாச்சு" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர் பட்டாளத்தை அதிகரித்தார். ஆனால் திடீரென பட வாய்ப்புகளை இழந்து காணாமல் போனார். இதற்கு காரணம் பிரசாந்த்தின் மனைவி தான் என்று கூறப்படுகிறது.
தன் மனைவி ஏற்கனவே திருமணமானவர் என்ற விஷயம் பிரசாந்த்திற்கும் அவரின் குடும்பத்தினருக்கும் திருமணம் முடிந்த பிறகு தான் தெரியவந்தது. இதனால் பிரசாந்த் அவரின் மனைவியை விவாகரத்து செய்தார். இதன் பிறகு பிரசாந்த் மனவுளைச்சலுக்கு ஆளானாராம்.

துரோகம்
தற்போது பிரசாந்த் நடிப்பில் அந்தகன் தயாராகி உள்ளது. இருப்பினும் இப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருக்கிறது.
இதற்கு காரணம், பிரசாந்த் இப்படத்திற்கு பிறகு சினிமாவில் முன்னேறி விட கூடாது என்பதற்காக சிலர் அவருக்கு எதிராக துரோகம் செய்கின்றனர் என்று பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
