அதுக்கு மட்டும் விஜய்-ன்னா ஓகே!!! விக்ரமை தூக்கி ஒதுக்கிய நடிகை திரிஷா...
தமிழ் சினிமாவில் மாடலிங்துறையில் இருந்து சிறு கதாபாத்திரத்தில் ஜோடி படத்தில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை திரிஷா. அப்படத்தினை அடுத்து மெளனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக கேரியரை ஆரம்பித்த திரிஷா, முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து கனவுக்கன்னியாக மிகப்பெரிய அந்தஸ்த்தை பெற்றார்.
இடையில் பல பிரச்சனைகளை சமாளித்து இழந்த மார்க்கெட்டை தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸில் பட்டையை கிளப்பி வருகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார் திரிஷா.
இப்படத்தில் விஜய்க்கு முத்தக்காட்சியில் நடித்து அதிர்ச்சியும் கொடுத்தார். இந்நிலையில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி 2 படத்தில் முதலில் திரிஷாவை நடிக்க கேட்டார்களாம். ஆனால் அதை ஒரேடியாக ஏற்க மறுத்திருக்கிறார்.
அதற்கு காரணம் கேரக்டரில் திரிஷா கர்ப்பமாக இருப்பது போன்றும் அம்மா கேரக்டராகைருப்பது போன்றும் இருப்பதால் அந்த கேரக்டரை ஏற்க மறுத்திருக்கிறார்.
அப்போது விக்ரமுக்கு நோ சொன்ன திரிஷா லியோ படத்தில் அம்மா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி என்று கேள்வி எழுந்து வருகிறது.