20 வருட பகையில் யுவனை நம்பினா நடுத்தெருதான்!! 68 படத்தில் விஜய் எடுத்த அதிரடி முடிவு..

Vijay Thaman Yuvan Shankar Raja Venkat Prabhu Thalapathy 68
By Edward Sep 01, 2023 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் கோடியில் சம்பளம் வாங்கும் டாப் நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்து வந்தது.

அந்தவகையில் கஸ்டடி படத்திற்கு பின் இயக்குனர் வெங்கட் பிரபு தான் இயக்கவுள்ளார் என்று தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. பெரும்பாலும் வெங்கட் பிரபு என்றால் அவர் படத்தில் யுவன் சங்கர் ராஜா இருப்பார் என்பது அனைவருக்கு தெரிந்த ஒன்று.

அப்படி விஜய்யுடன் 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக யுவன், அவரின் கூட்டணியில் சேராமல் இருந்து வந்தார். தற்போது 20 ஆண்டுகள் கழித்து யுவன் சங்கர் ராஜா தளபதி 68 படத்தில் இசையமைக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

ஆனால் யுவன் வேலையில் கொஞ்சம் ஸ்லோவாக செயல்படுபவர் என்றும் அப்பாவை போல் அனிருத் மாதிரி டியூனுக்கு காக்க வைக்க மாட்டார். இதை நினைத்து விஜய், தமன் உடனிருந்து உதவட்டும் என்று கூறியிருக்கிறாராம்.

படத்தின் லுக் டெஸ்ட் முடிந்து ஷூட்டிங்கினை சீக்கிரமே ஆரம்பிக்கவுள்ளதால், விஜய் பாடலோ, பின்னணி இசையோ லேட்டாக கூடாது என்பதற்காக விஜய் முடிவு எடுத்துள்ளாராம். ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது அதிகாராப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.