அம்மாவின் பிறந்தநாள் பார்ட்டி!! பிகில் சிங்கப்பெண் நடிகை ரெபாவின் பார்ட்டி புகைப்படங்கள்..

Reba Monica John Tamil Actress Actress Coolie
By Edward Oct 30, 2024 11:30 AM GMT
Report

ரெபா மோனிகா ஜான்

மலையாள சினிமாவில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். தமிழில் ஜருகண்டி என்ற படத்தில் ஜெய்யுடன் ஜோடியாக நடித்து அறிமுகமாகினார்.

அதன்பின் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

அம்மாவின் பிறந்தநாள் பார்ட்டி!! பிகில் சிங்கப்பெண் நடிகை ரெபாவின் பார்ட்டி புகைப்படங்கள்.. | Reba Monica John Mother Birthday Party Photos Post

பிகில் படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்து பிரபலமான ரெபா மோனிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். கிளாமர் லுக்கில் நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வந்த ரெபா மோனிகா கடந்த 2022ல் ஜோமொன் ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அம்மாவின் பிறந்தநாள்

திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வரும் ரெபா மோனிகா ஜான் தற்போது சகலகலா வல்லபா என்ற கன்னட படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் ரெபா. இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிரும் ரெபா, தன்னுடைய அம்மாவின் பிறந்தநாள் பார்ட்டியில் குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.