திருமணமாகாமல் பிறந்தவள் நான்!! பிறப்பு சான்றை திருடிட்டாங்க!! நடிகையின் மகள் பட்ட கஷ்டம்...
விவியன் ரிச்சர்ட்ஸ் - நீனா குப்தா
பிரபல பாலிவுட் நடிகை நீனா குப்தாவின் ஒரே மகள் மசாபா குப்தா, ஆடை வடிவப்பாளராக பணியாற்றி பிரபலமானார் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரரான விவியன் ரிச்சர்ட்ஸின் மகள் தான் மசாபா. அவருக்கும் நீனா குப்தாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு பிறந்த குழந்தை தான் மசாபா. அப்போது நீனாவுக்கும் ரிச்சர்ஸுக்கும் திருமணம் நடக்கவில்லை.

கழுத்தில் தாலி இல்லாமல் குடும்பத்தார் ஆதரவு இல்லாமல் மசாபாவை பெற்றெடுக்க கஷ்டப்பட்டதாக நீனா குப்தான் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இதனால் நீனா குப்தா திருமணமாகாமல் தாயானவர் என்று விமர்சிக்கப்பட்டார். அதே காரணத்திற்காக மசாபா குப்தாவை பள்ளியில் சக மாணவ மாணவியர் கிண்டல் செய்திருக்கிறார்கல்.
மகள் மசாபா குப்தா
இந்நிலையில் பத்திரிக்கையாளர் பர்கா தத்திடம் பேசிய மசாபா தன்னுடைய பிறப்பு சான்றிதழ் திருடப்பட்டதாக கண்ணீருடன் கூறியிருக்கிறார்.

அதில் நான் பிறந்தபோது என் பிறப்பு சான்றிதழை மருத்துவமனையில் இருந்து திருடி மீடியாவிடம் லீக் செய்துவிட்டார்கள். அது செய்தித்தாளில் முதல் பக்கத்தில் வந்தது. நான் சட்டவிரோதமாக பிறந்த குழந்தை என்பதை நிரூபிக்கவே இப்படி செய்திருக்கிறார்கள். எனக்கு 9, 10 வயது இருக்கும்போது தான் அந்த செய்தி பற்றி புரிந்தது. இருந்தாலும் எனக்கு முழுதாக புரியவில்லை.
என் பிறப்பு பற்றி பலவிதமாக பேசப்பட்டது. ஆனால் பிறப்பு சான்றை ஏன் திருடி மீடியாவிடம் கொடுக்க வேண்டும் என்பது மட்டும் எனக்கு புரியவே இல்லை. என் அம்மாதான் பாவம், அவரை நினைத்தால் பாவமாகவுள்ளது. அந்நேரத்தில் அவர் எபடி சமாளித்தாரோ, மறைந்த கவிஞரும், ஓவியரும், இயக்குநருமான மிஸ்டர் ப்ரிதிஷ் நந்தி தான் அந்த கொடூரமான செயலை செய்தார்.

அவர்மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை, ஆனால் அவர் ஏன் இப்படி செய்தார் என்று தோன்றுகிறது என மசாபா தெரிவித்துள்ளார். விவிய்ன் ரிச்சர்ட்ஸ் ஏற்கனவே திருமணமான நிலையில் நீனா குப்தா கர்ப்பமானார், ரிச்சர்ட்ஸ் தன் மனைவியை விட்டுவிட்டு நீனாவுடன் வர தயாராக இல்லை. இதனையடுத்து தனி ஆளாக மகள்க்கு பொறுப்பேற்றார் நீனா குப்தா.